வருகிற ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு! யாருக்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

0
185

வருகிற ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு! யாருக்கெல்லாம் அனுமதி? தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

கொரோனா தொற்றானது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 7-ந் தேதியிலிருந்து இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 9-ந் தேதி மற்றும் 16-ந் தேதி ஆகிய நாட்களில் அரசு அறிவித்தபடி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அன்றைய தினம் பொது போக்குவரத்தான பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி போன்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மற்றும்  சென்னையில் மின்சார ரயில் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த முழு ஊரடங்கு நாட்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இந்தநிலையில் பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு நடைமுறைபடுத்தப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் வருகிற ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வருகிற ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கின் போது கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும் எனவும், அதே வகையில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஊரடங்கின் போது அனைத்து மாவட்ட ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் வழக்கமாக இயங்கும் ஆட்டோக்களுக்கு அனுமதி அளித்தும், அதை தொடர்ந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் வாடகை கார்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Previous articleமாஸ்க் போட மாட்டேன்… அடம்பிடித்த பயணி! தரையிறங்கிய விமானம்!!
Next articleடைட்டான டிரசில் அங்கங்கே எடுப்பாக தெரிய போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here