சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு  ஊரடங்கு! – அதிரடியாக வெளியிட்ட மாநில அரசு!!

0
115

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு  ஊரடங்கு! – அதிரடியாக வெளியிட்ட மாநில அரசு!!

இந்தியாவில் வேகமாக பரவிய கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்தி வந்து பின்பு மெல்ல குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்நிலையில் நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து தொற்றை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி அந்தந்த மாநிலங்களில் உள்ள தொற்று பரவலைப் பொறுத்து மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.

அந்த வகையில் கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக,டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில்:

டெல்லியில் கடந்த 8-10 நாட்களில் சுமார் 11,000 கொரோனா நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அதில் சுமார் 350 நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர் என்றும், அதில் 124 நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் தேவைப்படுவதாகவும் மற்றும் 7 பேர் வென்டிலேட்டரில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவேதான் , கொரோனா பரவலைத் தடுக்க சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் டெல்லியில் ஊரடங்கு உத்தரவை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் தவிர அனைத்து அரசு அதிகாரிகளும் வீட்டில் இருந்தே பணியாற்றுவார்கள் எனவும், தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleஇயக்குனரை மிரட்டும் காமெடி நடிகர்! காவல்துறையிடம் பகீர் புகார் மனு!
Next articleஇரண்டு மணி நேரம் சார்ஜ் 20 கிலோமீட்டர் தூரம் பயணம்! சேலம் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு!