இயக்குனரை மிரட்டும் காமெடி நடிகர்! காவல்துறையிடம் பகீர் புகார் மனு!

0
73
Comedy actor intimidating the director! Pakir lodges complaint with police
Comedy actor intimidating the director! Pakir lodges complaint with police

இயக்குனரை மிரட்டும் காமெடி நடிகர்! காவல்துறையிடம் பகீர் புகார் மனு!

தமிழ் திரையுலகில் பல நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர். கவுண்டமணி ,செந்தில், வடிவேல், விவேக் இவர்களுக்கு அடுத்த படியாக தம்பிராமையா தற்பொழுது உள்ளார். இவர் முதன்முதலாக வடிவேலுவை வைத்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தை இயக்கினார். அதனைய டுத்து கும்கி, கழுகு, தலைவா, ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவரது நகைச்சுவை நடிப்பானது  மைனா திரைப்படத்தில் பெருவாரியாக பேசப்பட்டது. மேலும் மைனா திரைப்படத்தில் துணை நடிகருக்கான தேசிய விருதையும் இவர் பெற்றார் எனபது குறிப்பிடத்தக்கது.

இவர் தனி ஒருவன் என்ற படத்தில் செங்கல்வராயன் என்ற கதாபாத்திரத்தில்  நடித்தார். அந்த கதாபாத்திரம் இவருக்கு அதிக பெயர் வாங்கிக் கொடுத்தது. அதனையடுத்து புலி, வேதாளம் என்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். மீண்டும் இவர், அப்பா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அப்படமும் அதிகளவு வெற்றியடைந்து. இவருக்கு அப்படம் பெயர் வாங்கிக் கொடுத்தது. தம்பி ராமையா  மகன்தான் உமாபதி ராமையா. இவரது நடிப்பில் தண்ணீ வண்டி  என்ற என்ற திரைப்படம் வெளியானது. சரவணன் தான் இப்படத்தின் தயாரிப்பாளர்.இப்படத்தின் தயாரிப்பாளர் சரவணன்  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தம்பி ராமையா மற்றும் அவரது மகன் உமாபதி ராமையா மீது புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்ததை யொட்டி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். பேட்டியில் தயாரிப்பாளர் கூறியது, நான் 2015 ஆம் ஆண்டு படம் எடுக்கும் நோக்கில் இருந்தேன்.அப்பொழுது தம்பி ராமையா தன்னை அணுகி தன்னுடைய மகனை வைத்து படத்தை எடுங்கள் என கேட்டுக்கொண்டார். அவ்வாறு நீங்கள் தன் மகனை வைத்து படத்தை எடுத்தால் அனைத்து பொறுப்புகளையும் தானே ஏற்று கொள்வதாக கூறினார்.மேலும் படத்திற்கான விளம்பரம் செய்து தன் மகனை வைத்து ஒத்துழைப்பும் கொடுத்து படத்தை  வெற்றியடைய வைப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தார்.

இப்படம் 2015ஆம் ஆண்டு தயாராக தொடங்கியது. 2020ஆம் ஆண்டு தான் படம் முடிவடைந்தது. இப்படம்  2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் வெளியாக இருந்தது.பட வெளியீட்டிற்காக  கதாநாயகனாக உமாபதி ராமையாவை அழைத்தோம். பலமுறை அழைத்தும் அவர் படம் ரிலீசுக்கு வரவில்லை. தன்னை சிரமத்திற் குள்ளாகுவதர்கே தம்பி ராமையா மற்றும் அவரது மகன் உமாபதி ராமையா இவ்வாறு செய்து வருகின்றனர். இப்படம் வெற்றி அடையாமல் தோல்வி அடையவே இவர்கள் இவ்வாறான காரியங்களை செய்கின்றனர் என்று கூறினார். மேலும் தன்னை தம்பி ராமையா மற்றும் அவரது மகன் உமாபதி ராமையா மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறினார்.அதனால் காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.