தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சகட்ட நிலையை எட்டி உள்ளதால் நேற்று ஒரு சில தளர்வுகள் அளித்து இன்று முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்படுகிறது, என்று அரசு அறிவித்தது இருக்கிறது. ஏற்கனவே அளித்தது போல் பால் , குடிநீர், பத்திரிகை போன்ற விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் மருத்துவக் குழுவிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இந்நிலையில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வராததால் மேலும் ஒரு முழு ஊரடங்கு தேவைப்படுகிறது என்று பரிந்துரைத்த நிலையில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அதனால் இன்று முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. காய்கறிகள் மற்றும் பழங்கள் தோட்டக்கலை வாகனங்கள் மூலம் வினியோகிக்கப்படும், ஏடிஎம் செயல்படும். பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்கள் செயல்படும். மருந்தகம், நாட்டு மருந்தகம் கால்நடை மருந்தகம் போன்றவற்றுக்கு அனுமதி என்று அறிவித்துள்ளது.
தலைமைச் செயலகம் உள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கும். தனியார் துறை மற்றும் ஐடி நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும். மின்னணு சேவைகள் காலை 8:00 முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம் என்று அனுமதி.
அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதேபோல், துறைமுகங்கள், விமான நிலையங்கள், சரக்கு கிடங்குகள், தொலைதொடர்பு சேவைகள், அத்தியாவசிய தரவு மையங்கள் பரமாரிப்பு பணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே இ-பதிவு முறையை பின்பற்றி பயணிக்கலாம். இருசக்கர வாகனங்களில் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வோர் 25. 5 .21 முதல் அனுமதிக்கப்பட மாட்டாது. அதனால் தொழிற்சாலைகள் தொழிலாளர்களை அழைத்து வர நான்கு சக்கர வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
இ-பதிவு செய்து அதனடிப்படையில் வழங்கப்பட்ட பாஸ்களின் அடிப்படையில் காவல் துறையினர் இ
வாகனங்களை அனுமதிப்பர்.
திருமணத்துக்கான இ-பதிவு நீக்கப்பட்டுள்ளது
உணவுககங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையும் இயங்கலாம். உணவகங்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்படும். மால்கள் இயங்க அனுமதி கிடையாது. . சரக்கு வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதி. மருத்துவ காரணங்களுக்காக செல்லும் பணிக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பதிவு தேவையில்லை.பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மக்கள் தேவையின்றி வெளியே வர, கூட்டம் கூடுவது ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.