சூர்யாவிற்கு தொடரும் அடுத்தடுத்த சோதனைகள்!! சூர்யா 44 படத்திற்கு வந்த சிக்கல்!!

0
153
Further trials for Surya!! Trouble coming to Suriya 44!!
Further trials for Surya!! Trouble coming to Suriya 44!!

சூர்யா தற்போது நடித்து வரும் சூர்யா 44 படத்திற்கு புதியதொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவிற்கு தற்போது அடுத்தடுத்து சோதனைகள் வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே நடிகர் சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் அவரின் அடுத்த படமான சூரியா 44 படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தினை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன. சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படம் பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை மையமாகக் கொண்டது.

நாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் சங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் இந்த படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் ‘கல்ட்’ என்ற தலைப்பை யோசித்து வைத்துள்ளார். ஆனால் முரளியின் மகனான நடிகர் அதர்வா தான்  இயக்க இருக்கும் புதிய படத்திற்கு இந்த தலைப்பை  ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளார். இதனால் படத்தின் டைட்டிலுக்கு சிக்கல் வந்த நிலையில் சூர்யா 44 படக்குழு நடிகர் அதர்வாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளது.

ஆனால் படத்தின் டைட்டிலை அதர்வா தர மறுத்து விட்டதால் கார்த்திக் சுப்புராஜ் தற்போது வேறு ஒரு பொருத்தமான டைட்டிலை தேடி வருகிறாராம். அவர் என்ன பெயரை வைக்கப் போகிறார் என்று சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.

Previous articleஇரட்டை இலை சின்னம் முடக்கம் – பின்னணியில் பாஜக!! அதிருப்தியில்  எடப்பாடி பழனிசாமி!!
Next articleதிட்டம் ரெடி ஆயுதமும் ரெடி!! மோடியை கொலை செய்வது ஒன்றுதான் பாக்கி மும்பை பெண்ணின் பகீர் செயல்!!