இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க G pay Phonepe போதும்!! சில்லறை தேவையில்லை வந்தது புதிய மாற்றம்!!

Photo of author

By Rupa

 

 

இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க G pay Phonepe போதும்!! சில்லறை தேவையில்லை வந்தது புதிய மாற்றம்!!

சென்னை மாநகரில் மக்கள் மெட்ரோ பேருந்து ரயில் போன்றவைகளில் தங்களது பயணத்தை அன்றாடம் செய்து வருகின்றனர்.குறிப்பாக வேலைக்கு செல்பவர்களில் சிலர் மெட்ரோ பேருந்து மின்சார இரயில் என அனைத்தையும் உபயோகப்படுத்துகின்றனர்.இதனால் ஒவ்வொன்றிற்கும் பயணச்சீட்டு எடுக்க தாமதமாகும் என்பதால் இதனை எளிமையாக்க பாஸ் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.இதனை தொடர்ந்து தற்பொழுது யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியானது அனைத்து சென்னை மாநகர பேருந்துகளிலும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதமே இதற்கான சோதனையானது எம்டிசி பேருந்துகளில் அறிமுகப்படுத்தினர்.மேற்கொண்டு இந்த திடமானது வெற்றியடைந்ததை அடுத்து அனைத்து டிப்போக்களிலும் எம்டிசி பேருந்துகளில் இந்த யுபிஐ மூலம் பயணச்சீட்டு எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.இது குறித்து எம்டிசி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையும் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வைட் போர்டு தவிர்த்து இதர பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்ய வேண்டுமென்றால் கட்டாயம் டிக்கெட் எடுத்தாக வேண்டும்.

பெண்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் நடத்துனரிடம் இந்த பயணச்சீட்டு எடுப்பதில் சில்லறை பிரச்சனையானது உண்டாகுகிறது.ஆனால் இந்த யுபிஐ ஐடி மூலம் பயணச்சீட்டு எடுப்பது மிகவும் எளிமையானதாகவும் சில்லறை பிரச்சினை வருவதையும் முற்றிலும் தடுக்கிறது எனக் கூறுகின்றனர்.விரைவிலேயே சென்னை மாநகரிலுள்ள அனைத்து பேருந்துகளிலும் இந்த யுபிஐ வசதி கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நடத்துனர்களுக்கு கற்றுத்தரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.இதர மாநிலங்களில் இந்த யுபிஐ பயணச்சீட்டு எடுப்பது நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.