700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனம்!! சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை!!

Photo of author

By Sakthi

700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனம்!! சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை!!

Sakthi

Updated on:

g-square-group-company-that-evaded-700-crore-rupees-income-tax-department-sent-summons

700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனம்!! சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை!!

கோவையில் செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் ரூபாய் 700 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் கோவை மாவட்டத்தில் எல்.அண்ட்.டி பைபாஸ் சாலையில் ஜி ஸ்கொயர் சிட்டி என்னும் சிறிய நகரத்தை உருவாக்கி வருகின்றது.

இதற்கு மத்தியில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய 70 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதாவது கடந்த ஏப்ரல் 24ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய 70 இடங்களில் வருமான வரி சோதனை நடத்த தொடங்கினர். இந்த வருமான வரி சோதனை நேற்று அதாவது மே 1ம் தேதி நிறைவடைந்தது.

கடந்த ஏப்ரல் 24ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்த வருமான வரி சோதனையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது ஆதரப்பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவனம் ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது.