நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட சண்டை!! நினைவுகளை பகிர்ந்த ஹர்பஜன் சிங்!!

0
121
yesterdays-fight-in-the-ipl-match-harbhajan-singh-shared-memories
yesterdays-fight-in-the-ipl-match-harbhajan-singh-shared-memories

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட சண்டை!! நினைவுகளை பகிர்ந்த ஹர்பஜன் சிங்!!

நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி அவர்களுக்கும் லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அவருடைய பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் விளையாடின. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து போட்டியின் முடிவில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி அவர்களுக்கும் லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து விதிமுறைகளை மீறியதற்காக இருவருக்குமே 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் போட்டியின் போது விராட் கோலியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக் அவர்களுக்கு 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வை குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங் அவர்கள் நேற்றைய போட்டியில் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இருவரும் செய்த செயல் கிரிக்கெட்டுக்கு சரியானதல்ல. விராட் கோலி ஒரு லெஜன்ட். அதனால் இது போன்ற விஷயங்களில் அவர் ஈடுபடக்கூடாது. 2008ம் ஆண்டு எனக்கும் ஸ்ரீகாந்த் அவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார். 2008ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ஏற்பட்ட பிரச்சனையில் ஹர்பஜன் சிங் அவர்கள் ஸ்ரீகாந்த் அவர்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.