ஜி.வி. பிரகாஷ்-சைந்தவி காதலில் விரிசல் ஏற்படுத்திய நடிகை!! அந்த நடிகரின் தலையீட்டால் விவாகரத்து முடிவு!!

Photo of author

By Divya

ஜி.வி. பிரகாஷ்-சைந்தவி காதலில் விரிசல் ஏற்படுத்திய நடிகை!! அந்த நடிகரின் தலையீட்டால் விவாகரத்து முடிவு!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்,நடிகைகளின் தொடர் விவாகரத்து சம்பவங்கள் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இதில் பெரும்பாலும் காதலித்து திருமணம் செய்த பிரபலங்களே விவாகரத்து பெற்று வருகின்றனர்.

இயக்குநர் ஏ.எல் விஜய்-அமலா பால்,தெலுங்கு நடிகர் நாக சைதன்யா-சமந்தா,தனுஷ் – ஐஸ்வர்யாவை தொடர்ந்து பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஜோடி விவாகரத்து பெற இருக்கிறது.

திரைத்துறையில் முன்னணி பாடகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை உள்ளார்.

திருமண வாழ்க்கையை அழகாக வழிநடத்தி சென்று கொண்டிருந்த இவர்கள் திடீரென்று விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை? எதனால் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளனர் என்று ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.இதுவரை இவர்கள் விவாகரத்து பெற போகிறார்கள் என்ற வதந்தி,கிசுகிசுக்கள் கூட வெளி வந்ததில்லை.அவ்வாறு இருக்கையில் இவர்களின் இந்த திடீர் விவாகரத்து முடிவு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்க கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

இவர்களின் விவாகரத்திற்கு சமூக வலைத்தளங்களில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது.நடிகர் தனுஷ் தான் இவர்களுக்குள் விரிசலை ஏற்படுத்தி விவாகரத்து பெற வைத்துள்ளார் என்பது ஒரு தரப்பினரின் கருத்தாக இருக்கிறது.தனுஷ் அவர்கள் பல நடிகர் நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் தலையிட்டு அவர்களுக்குள் சண்டை ஏற்படுத்தி விவாகரத்து பெற வைத்துள்ளார்.ஜி.வி.பிரகாஷ் அவர்கள் தனுஷுடன் பல படங்களில் இசையமைப்பாளராக இணைந்து பணியாற்றி இருக்கிறார்.இவர்களுக்குள் ஒரு நட்பு இருந்து வரும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்திற்கு இவர் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இசையமைப்பாளராக பணியாற்றி வரும் ஜி.வி.பிரகாஷ் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகராக மாறி உள்ளார்.ஆனால் இவரை நடிகராக பார்க்க சைந்தவிக்கு விருப்பம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ் அவர்கள் நடிகை கயல் ஆனந்தியுடன் த்ரிஷா இல்லனா நயன்தாரா,கடவுள் இருக்கான் குமாரு,எனக்கு இன்னொரு பேர் இருக்கு உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்தார்.இதனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற கிசுகிசுக்கள் பரவத் தொடங்கியது.இதனால் இருவரும் இணைந்து நடிப்பதை தவிர்த்தனர்.

இருந்தபோதும் கயல் ஆனந்தி விவகாரம் ஜி.வி.பிரகாஷ் வீட்டில் பெரும் பிரச்சனையை உண்டு பண்ணியது.இதை பற்றி கண்டுகொள்ளாமல் ஜி.வி.பிரகாஷ் அவர்கள் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்திருக்கிறார்.படங்களில் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை சைந்தவி விரும்வில்லை.இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை சமாதானம் என்று இருந்து வந்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் இவர்களின் சண்டை பெரிதாகவே இருவரும் பிரிந்து வாழந்து வந்திருக்கின்றனர்.ஜி.வி.பிரகாஷ் அவர்களின் மாமாவான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூட இவர்களுக்கு பஞ்சாயத்து செய்து வைத்திருக்கிறார்.ஆனால் இவர்கள் யார் பேச்சையும் கேட்காமல் பிரிய முடிவெடுத்திருக்கின்றனர்.இவர்களின் இந்த விவாகரத்து முடிவு குழந்தை அன்வியின் எதிர்காலத்தை முழுமையாக பாதிக்கும் என்பதினால் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.விவாகரத்து முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.