இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த 4 போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் வென்று முன்னிலையில் உள்ளது.
இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் களமிறங்கி விளையாடியது. ஆனால் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் 4 வது 5 வது போட்டி கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் இருந்தது. ஆனால் 4 வது போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டி நடந்த முடிந்த பின் ஓய்வறையில் கம்பீர் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். நான் இதுவரை இப்படி இருந்தது போதும் என முடிவெடுத்துள்ளேன். இதற்கு மேல் எப்படி விளையாட வேண்டும் என திட்டம் வைத்துள்ளேன் அந்த திட்டத்தின் படி தான் இனி விளையாட வேண்டும். உங்கள் விருப்பத்திற்கு ஆடினால் நான் பெஞ்சில் வைக்கவும் தயங்க மாட்டேன் என்று ஓய்வறையில் கூறியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.