cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாட முக்கிய வீரரை பரிந்துரை செய்த கம்பீர் மறுத்த தேர்வு குழு.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 4 போட்டிகள் இதுவரை விளையாடி முடிந்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருந்தும் நடந்து முடிந்த 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதனால் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் ஆளாக தென்னாபிரிக்க அணி இறுதிப் போட்டியில் நுழைந்தது. மேலும் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணி உள்ளது. மூன்றாவது இடத்தில் இந்திய அணி உள்ளது. இந்திய அணி மோசமான பேட்டிங் செய்து வருவதால் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தொடர் தொடங்கும் முன் நடந்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆஸ்திரேலியா தொடர் தொடக்கும் முன் இந்திய தேர்வு குழுவிடம் இந்த தொடரில் இந்திய அணியில் புஜாரா வேண்டும் என அடம் பிடித்துள்ளார். ஆனால் அகர்கர் அதற்கு அவரை அனுமதிக்க முடியாது என மறுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த செய்தி வந்த பின் தொடர் முடிந்த பின் அதை பேசி என்ன செய்வது. மேதம் இருக்கும் ஒரு போட்டியில் வெற்றி பெறுங்கள் என்று கூறி வருகின்றனர்.