இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலியா உடனான தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இந்த இரு தொடர்களில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வென்று சமநிலையில் உள்ளது. ‘
இந்நிலையில் மூன்றாவது போட்டியின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்திய அணியில் ஒரு வீரரை மாற்ற வேண்டிய சூழல் உள்ளது. அதில் சிலர் அஸ்வின் நீக்கிவிட்டு வாஷிங்டன் என்றும் ஒரு சிலர் நிதிஷ் என்றும் கூறி வருகின்றனர்.
ஆனால் இந்த மூன்றாவது போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டியை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நிதீஷ் குமார் ரெட்டி பவுலிங்கில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை என்றாலும் பேட்டிங்கில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எனினும் நிதிஷ் குமார் ரெட்டி யை நீக்க திட்டமிட்டுள்ளதாக வந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் கம்பீர் மற்றும் ரோஹித் க்கு பைத்தியம் தான் பிடிச்சிருச்சு என்று கூறி வருகின்றனர்.