இந்திய நட்சத்திர மூத்த வீரர்களில் முக்கிய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவர் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டியின் நடுவே ஓய்வை அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு காரணம் கம்பீர் மற்றும் குழு நிர்வாகம் என பேசப்பட்டு வருகிறது.
இந்திய அணி நியூசிலாந்து தொடரை முடிந்து அடுத்து ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றார்.
இவருக்கு வாய்ப்பு அளிக்க விடப்போவதில்லை என தெரிந்து அவர் ஓய்வு தெரிவிப்பதாக கூறிய நிலையில் இந்திய அணி இரண்டாவது போட்டியில் ப்ளேயிங் லெவனில் அஸ்வினை விளையாட வைத்துள்ளது. மேலும் அடுத்த மூன்றாவது போட்டியில் ஜடேஜா இடம்பெற்று 77 ரன்கள் அடித்து அடுத்து வரும் போட்டிகளில் அவர் தான் இடம் பெறுவார் என பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் திடீரென அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். தனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப் படும் என தெரிந்து கொண்டு அவர் இவ்வாறு செய்துள்ளார். இதற்கு காரணம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தான் என ரசிகர்கள் மத்தியில் தகவல் தீயாய் பரவி வருகிறது.