தீராத கஷ்டத்தை தீர்க்கும் கணபதி வழிபாடு! இதை எவ்வாறு செய்வது!

Photo of author

By Divya

தீராத கஷ்டத்தை தீர்க்கும் கணபதி வழிபாடு! இதை எவ்வாறு செய்வது!

உலகில் கஷ்டம் இல்லாத மனிதர்கள் இல்லை.. எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் ஏதோ ஒரு கஷ்டம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.

பணம் இருப்பவருக்கும் இதே நிலைமை.. பணம் இல்லாதவர்களுக்கும் இதே நிலைமை தான்.. எந்த ஒரு கஷ்டத்திற்கும் தீர்வு ஏதோ ஒரு வழியில் இருக்கும்…

நம் அனைத்து கஷ்டத்திற்கும் தீர்வு கணபதி வழிபாடு…

உலகின் முதல் கடவுள் என்று போற்றப்படும் கணபதியை வழிபட்டு வருவது தான் கஷ்டங்கள் தீர வழி…

இதை எவ்வாறு செய்வது…

பொதுவாக கணபதி சிலை அரச மரம்.. ஆலமரத்தடியில் தான் இருக்கும்… இந்த கணபதிக்கு அருகம்புல் உகந்த ஒன்று. இதை மாலையாக கட்டி கணபதிக்கு சாற்றினால் உங்கள் கஷ்டம் அனைத்தும் மாயமாகி விடும்.

அதுமட்டும் இன்றி மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி இரட்டை திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு அருகம்புல் மாலை மற்றும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதன் மூலம் நம் கஷ்டத்திற்கு விடிவு கிடைக்கும்.

இந்த வழிபாட்டை எந்த நாளிலும் செய்யலாம்… இந்த வழிபாட்டை செய்யும் பொழுது கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் வாழ்வில் ஏற்பட்டு இருக்கும் மற்றும் ஏற்படக் கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்க கணபதி அருள் புரிவார்.