புதிய நடைமுறையில் ஆன்லைன் மோசடி செய்யும் கும்பல்!!! இன்னும் உசாராக இருக்க வேண்டும் போலயே!!!

0
42

புதிய நடைமுறையில் ஆன்லைன் மோசடி செய்யும் கும்பல்!!! இன்னும் உசாராக இருக்க வேண்டும் போலயே!!!

கொல்கத்தா மாநிலத்தில் மருத்துவர்களை குறிவைத்து தற்கொலை மோசடி ஒன்று தற்பொழுது நடைபெற்று வருவதால் சைபர் கிரைம் காவல்துறையினர் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கு முன்பு பல விதமான ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வந்தது. வீடியோ காலில் ஆடைல்லாமல் பேசி அதை புகைப்படம் எடுத்து வைத்து மிரட்டி பணம் பறிப்பது, பார்ட் டைம் வேலை மோசடி போன்ற பல மோசடிகள் நடந்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது புதிய மோசடியை கும்பல் ஒன்று கையில் எடுத்துள்ளது.

அது வேறு ஒன்றும் இல்லை. அதே போல வீடியோ கால் செய்து மருத்துவர்களையும், சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களையும் ஏமாற்றி பணம் பறிக்கும் புதிய யுக்தியை மோசடி கும்பல் கையில் எடுத்துள்ளது.

இந்த மோசடி முதலில் இனிப்பாக தொடங்குகின்றது. அதாவது நேர்காணல் அல்லது ஆலோசனை என்ற பெயரில் ஒரு பெண் வீடியோ கால் செய்து பேசுகிறார். பேசி முடிந்த பிறகு அந்த பெண் மகிழ்ச்சியுடன் வீடியோ அழைப்பை துண்டிக்கின்றார். பிறகு தான் துயரம் தொடங்குகின்றது.

அந்த பெண் அழைப்பை துண்டித்த சில நேரங்கள் கழித்து அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக அந்த பெண் அழைக்கப்பட்ட நபருக்கு அழைப்பு வரும். அந்த அழைப்பில் அந்த பெண் உங்களிடம் பேசிய சில மணி நேரங்களில் தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான மருத்துவச் சான்றிதழை வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்புவார்கள்.

இதன் பின்னர் ஒரு காவலர் அழைத்து பேசுவது போலவும் விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைப்பதாகவும் நீதிமன்ற சம்மனை வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்புகிறார்கள். இதையடுத்து நீதிமன்ற விசாரணையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் காவலர் கேட்கும் தொகையை அந்த நபர் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்படுகிறது.

இப்படி ஒரு வித்தியாசமான புகாருடன் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு நபர்கள் சைபர் கிரைமில் புகார் அளித்தனர். புகார் அளித்த இரண்டு நபர்களும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகாரின் அடிப்படையில் 22 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதனால் சைபர் கிரைம் காவல் துறையினர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி இந்த மாதிரியான மோசடி அழைப்புகள் வந்தால் அலட்சியப்படுத்தாமல் பொதுமக்கள் அனைவரும் காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.