திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்!!! சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்!!!

0
36

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்!!! சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்!!!

திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் மலைப் பாதையில் மேலும் ஒரு சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாகவும் அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பதியில் பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி நடைபாதையில் கடந்த மாதம் பெற்றோர்களை விட்டு சற்று முன்னாடி சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்து கொன்றது. மேலும் அலிபிரி பாதையில் தந்தையுடன் நடந்து சென்ற சிறுவனை சிறுத்தை கவ்விக் கொண்டு சென்றது. அப்பெழுது சிறுவனின் தந்தையுடன் அருகில் இருந்த அனைவரும் விரட்டி சென்றதால் அந்த சிறுவனை அப்படியே விட்டுவிட்டு அந்த சிறுத்தை சென்றது.

இதையடுத்து நடைபாதை வலியாக செல்லும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் பல விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்தது. குழுவாக செல்ல வேண்டும், இரவு பத்து மணிக்கு மேல் நடக்கக் கூடாது, பக்தர்களுக்கு கையில் ஊன்றுகோல் கொடுப்பது போல பல நடைமுறைகளை செய்தது.

இதைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டது. இந்த கூண்டுகளில் இதுவரை 4 சிறுத்தைகள் பிடிபட்டது. இந்த 4 சிறுத்தைகளும் திருப்பதி வன உயிரின பூங்காவில் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இதையடுத்து மலைப்பாதையில் சுற்றித் திரிந்த அனைத்து சிறுத்தைகளும் பிடிக்கப்பட்டதாகவும் இனிமேல் பக்தர்கள் பயம் இல்லாமல் கோவிலுக்கு நடைபாதை வழியாக செல்லலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்தது. இதனால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் திருப்பதி நடைபாதையில் 300க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று(செப்டம்பர்1) அதிகாலை சிறுமியை சிறுத்தை இழுத்து சென்று கொலை செய்த இடத்தில் மேலும் ஒரு சிறுத்தை நடமாடியது அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டத்தை கண்ட தேவஸ்தான அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த சிறுத்தையை பிடிக்க சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் கூடுதலாக கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

திருப்பதி மலைப் பகுதி அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளது. இதில் 10 சிறுத்தைகள் மக்கள் நடமாடும் நடைபாதையில் நடமாடி வருகின்றது. இந்நிலையில் இந்த சிறுத்தைகளை பிடிக்கவும் பாதுகாப்பு அளிக்கவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.