சவுக்கு சங்கர் வீட்டில் மலத்தை கொட்டிய கும்பல்!. பின்னணியில் யார்?…

0
42
savukku shankar

திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர். இதனால் இவரை 6 மாதங்கள் குண்டர் சட்டத்தில் அடைத்தனர். கரூரில் செந்தில் பாலாஜி பினாமி பெயரில் இடம் வாங்கி பிரம்மாண்ட மாளிகையை கட்டி வருகிறார் என்கிற செய்தியக் ஊடகங்களில் வெளிக்கொண்டு வந்தவர்தான் சவுக்கு சங்கர். இதனால், செந்தில் பாலாஜியின் தூண்டுதலின் பேரில்தான் தான் கைது செய்யப்பட்டதாக அப்போது சொன்னார் சவுக்கு சங்கர்.

சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் திமுகவை மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் சவுக்கு சங்கர். மேலும், டிவி சேனல்களையும் கட்டுப்படுத்தி திமுகவுக்கு எதிரான செய்திகளை வரவிடாமல் தடுக்கிறார்கள் எனவும் பகீர் புகார்களை கூறிவந்தார். மேலும், ஸ்டாலினின் பொம்மை முதல்வராக இருக்கிறார். அதிகாரிகள்தான் ஆட்சியை நடத்துகிறார்கள் எனவும் அவர் கூறினார்.

savukku shanakr

இந்நிலையில்தான், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 9.30 மணியளவில் துப்புறவு பணியாளர்கள் உடைகளை அணிந்த 50க்கும் மேற்பட்டோர் நுழைந்தனர். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் மலக்கழிவுகளை கொட்டினார்கள். அப்போது சவுக்கு சங்காரின் தாய் மட்டும் வீட்டில் இருந்தார் அவரையும் அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 


காலை 9.30 மணி முதல் சுமார் 3 மணி நேரங்கள் அவர்கள் என் வீட்டில் இருந்தும் போலீசர் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை வீட்டிற்கு போக வேண்டாம் என சொல்கிறார்கள். அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களும் அந்த கும்பல் தாக்கியிருக்கிறது. இதற்கு பின்னணியில் திமுதான் இருக்கிறது என புகார் சொல்லியிருக்கிறார் சவுக்கு சங்கர். அவரின் வீட்டில் நடந்த இந்த செயலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

திமுகவை யாராவது விமர்சித்தால் போலீசாரை அனுப்பி கைது செய்வது, குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளுவது, அசிங்கப்படுத்துவது போன்ற வேலைகளில் திமுக தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..

 

Previous articleஜெயிலர் 2-வுக்கு கூப்பிட்டா நடிப்பேன்!.. மோகன்லால் ஜாலி பேட்டி!…
Next articleதிமுக ஆட்சியை சிக்கலில் தள்ளிய சம்பவங்கள்: சட்டசபை நடக்கும் போதே தமிழகம் முழுக்க பகீர்!