நம் சமையறையில் இருக்க கூடிய முக்கியமான மூலிகை பூண்டு.இது சைவம்,அசைவம் என்று அனைத்து வகை உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது.பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பூண்டில் வைட்டமின் சி,வைட்டமின் பி6,செலினியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இரத்த அழுத்தம்,உடல் பருமன்,அஜீரணக் கோளாறு போன்ற பல பாதிப்புகளை குணமப்படுத்த பூண்டு உதவுகிறது.
பூண்டு எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.உடலில் உள்ள தேவையற்ற நச்சுக் கழிவுகளை அகற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.அதேபோல் பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கருமுட்டை வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பூண்டு சேர்க்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும்.இதனால் கருவுறுதல் எளிதில் நடக்கும்.
பூண்டை இடித்து பாலில் போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் கூடிய விரைவில் பலன் கிடைக்கும்.அதேபோல் மாதவிடாய் கோளாறை சரி செய்ய பூண்டு உதவுகிறது.மாதவிடாய் தொடங்கிய அடுத்த 10 நாட்களுக்கு பூண்டு சாப்பிட்டு வந்தால் கருப்பை தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.கருப்பையில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்ற பூண்டு சாப்பிடலாம்.
பூண்டு சேர்க்கப்பட்ட உணவுகள் கருமுட்டை வளர்ச்சி பெரிதும் உதவியாக இருக்கும்.அதேபோல் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் கருத்தரிப்பு எளிதாக நடைபெறும்.சின்ன வெங்காயத்தில் டீ செய்து பருகி வந்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.