பல நன்மைகளை கொடுக்கும் பூண்டு… இதை இவ்வாறு பயன்படுதலாமா..?

0
132

பல நன்மைகளை கொடுக்கும் பூண்டு… இதை இவ்வாறு பயன்படுதலாமா..?

நமது உடலுக்கு பல சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் பூண்டின் மற்ற நன்மைகள் என்ன என்பது பற்றியும் பூண்டை வேறு எந்த பொருள்களுடன் பயன்படுத்துவது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மற்ற பொருள்களுடன் பூண்டு சேர்த்து பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் நன்மைகள்…

* பூண்டோடு சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நம்மக்கு ஏற்படும் கீழ்வாதம் குணமாகும்.

* பூண்டையும் சிறிதளவு உப்பையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் திடீரென்று ஏற்படும் வயிற்று வலி குறையும். மேலும் நெஞ்சு எரிச்சல், நெஞ்சு கரிப்பு குறையும்.

* பூண்டு, ஓமம், வசம்பு இவை மூன்றையும் சம அளவு எடுத்து இடித்து மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாந்த ஜன்னி குணமாகும்.

* பூண்டின் சாறு எடுத்து உள்நாக்கின் மீது தடவினால் உள்நாக்கின் வளர்ச்சி குறையும்.

* பூண்டை குப்பைமேனி இலையுடன் வைத்து அரைத்து அதன் சாறு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளின் வயிற்றில் உள்ள வயிற்று பூச்சிகள் வெளியேறும்.

* பூண்டு மற்றும் வெற்றிலை இரண்டையும் சேர்த்து அரைத்து தேமல் மீது பூசினால் தேமல் மறைந்துவிடும். இதே கலவையை தொடை இடுக்கினுள் தடவி வந்தால் கக்கூஸ்படை குணமாகும்.

* பூண்டு, வசம்பு, வெற்றிலைக் காம்பு, திப்பிலி இவை நான்கையும் சம அளவு எடுத்து அரைத்து வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மாந்தம் குறையும். சளித் தொல்லை குறையும்.

* பூண்டு, வசம்பு, ஊமத்தை வேர் இவை மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து நல்லெண்ணெயில் சேய்த்து கொதிக்க வைத்து நன்கு சிவந்து வரும் பொழுது இதை காயத்தின் மீது வைத்தால் காயம் ஆறிவிடும்.

பூண்டை எடுத்து பொன்னாங்கன்னிக் கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.

* பூண்டு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலத்தை சருமத்தில் தேய்த்து வந்தால் அரிப்பு, நமச்சல் மறுயும்.

* பூண்டு ஒன்று, ஏழு மிளகு, ஒன்பது பச்சை மிளகாய் இலை இம்மூன்றையும் சேர்த்து அரைத்து காலூ மற்றும் மாலை என இரண்டு வேலைகளில் சாப்பாட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.

* பூண்டு சாறு மற்றும் இஞ்சி சாறு இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து காலை, மாலை என இரண்டு வேலேகள் சாப்பிட்டு வந்தால் நெஞ்சுக் குத்து நீங்கும்.

* பூண்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வாதம் குணமாகும்.

* பூண்டை பொடி செய்து தேனில் கலந்து கொண்டு தலை, புருவத்தில் பூச்சவெட்டு முடிவளராமல் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் முடி வளரத் தொடங்கும்.

Previous articleசரும பிரச்சனைகளை தீர்க்கும் வாசனை குளியல் பொடி… எவ்வாறு தயார் செய்வது..?
Next articleஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை… வாய்ப் புண்ணுக்கும் சிறந்த ஒரு மருந்தா..? வல்லாரையின் மற்ற பயன்கள் என்ன..?