GARUDAN: சூரியின் “கருடன்” வசூலில் வென்றதா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!!

Photo of author

By Divya

GARUDAN: சூரியின் “கருடன்” வசூலில் வென்றதா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!!

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சூரி அவர்களை மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுக்க வைத்த படம் “விடுதலை”.சூரியின் எதார்த்த நடிப்பால் அவரை ரசிகர்கள் ஹீரோவாக ஏற்றுக் கொண்டனர்.இதனை தொடர்ந்து விடுதலை 2,ஏழு மலை ஏழு கடல்,கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சூரியின் கருடன்

இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரியின் மிரட்டலான நடிப்பில் உருவான கருடன் திரைப்படம் நேற்று(மே 31) உலகம் முழுவதும் வெளியானது.சூரியுடன் இணைந்து சசிக்குமார்,உன்னி முகுந்தன்,சமுத்திரக்கனி,ரோஷினி,ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

ஆக்ஷன் ஹீரோவாக மாஸ் காண்பித்துள்ள சூரியின் கருடனுக்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.கோயில் நில அபகரிப்பை மையமாக கொண்டு நகரும் இப்படத்தில் சூரி அவர்கள் சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருக்கிறார்.

படத்தின் இண்டர்வல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் தரமாக இருக்கிறது.சூரியின் நடிப்பு வேற லெவலில் உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கருடனின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி படம் வெளியான முதலில் நாளில் ரூ.3 கோடி வசூலை ஈட்டிய கருடன் இரண்டாவது நாளும்  ரூ.1.3 கோடி வரை வசூலித்திருக்கிறது.வார விடுமுறை நாள் வரும் பொழுது படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.