cricket: இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறிய கருத்துக்கு கடுமையாக சாடிய ஆஸ்திரேலிய வீரர்.
இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இரண்டாவது போட்டியில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலிய அணியின் அரசியல் காரணமாகவே என்று கூறியது பெரிய சர்ச்சையாக வெடித்து வரும் நிலையில் நிறைய ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஹேசில்வுட் முதல் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹேசில்வுட் பேட்ஸ்மேன்களை குறை கூறியிருந்தார். இதை தொடர்ந்து அவர் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக நீக்கப்பட்டார்.
இதனை அவர் அரசியல் என்று கூறியதை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ரியான் ஹாரிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். கவாஸ்கர் கூறிய கருத்து குப்பை. அவர் கூறிய கருத்தை நான் குப்பை என்றுதான் கூறுவேன், அவர் கூறியது போன்ற நிகழ்வுகள் இந்திய அணியில் நிகழும் நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆஸ்திரேலியா அப்படி ஒருபோதும் செய்யாது. அவர் கூறிய கருத்தை குப்பையில் போட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகின்றனர். இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.