“கோஹ்லியின் பிரச்சனையை என்னால் 20 நிமிடத்தில் சரிசெய்ய முடியும்…” முன்னாள் ஜாம்பவான் வீரர் கருத்து!

Photo of author

By Vinoth

“கோஹ்லியின் பிரச்சனையை என்னால் 20 நிமிடத்தில் சரிசெய்ய முடியும்…” முன்னாள் ஜாம்பவான் வீரர் கருத்து!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லியின் ஃபார்ம் அவுட் தான் இப்போது உலக கிரிக்கெட்டின் ஹாட் டாப்பிக்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இதற்கிடையில் அவர் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்ததால் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் விளையாடி மீண்டும் ஃபார்முக்கு வந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கோஹ்லியின் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் வீரருமான கவாஸ்கர் இதுகுறித்து, “கோலியோடு 20 நிமிடம் உரையாடினால் என்னால் அவர் பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.

ஒரு தொடக்க ஆட்டக்காரரான நானும் ஆஃப் ஸ்டம்புக்கு எதிரே செல்லும் பந்தை எதிர்கொள்வதில் பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். கோலி நிச்சயமாக மீண்டும் பார்முக்கு வருவார். அவரின் சில தவறுகள் அவருக்கு பாடம் கற்றுத்தந்துள்ளன. அவரைப் போன்ற ஜாம்பவான்களுக்காக நாம் சில தோல்விகளை ஏற்றுக்கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார்.