இந்திய அணி தற்போது இரண்டாவது போட்டிக்கு தயாராகி வரும் நிலையில் ஆஸ்திரேலியா ஊடகங்கள் இந்திய அணியை பயமுறுத்த முயற்சி செய்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கோவத்தின் உச்சத்தில் விமர்சித்துள்ளார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டி நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாவது போட்டிக்கு இரண்டு அணிகளும் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் இரண்டாவதாக நடைபெற உள்ள மைதானம் அடிலெய்டு. இந்த மைதானம் முழுக்க முழுக்க வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒரு பிட்ச். அதனால் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு அது சாதகமாக இருக்கும் என ஆஸ்திரேலியா ஊடகங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதை பற்றி பேசிய சுனில் கவாஸ்கர் ஆஸ்திரேலியா ஊடகங்கள் அனைத்தும் இந்திய அணி பேட்ஸ்மேன்களை இந்த பிட்ச் பயமுறுத்தும் வகையில் இருக்கும் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களின் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் எனவும் கூறி இந்திய அணி வீரர்களை பயமுறுத்த நினைக்கிறார்கள். இதை ஆஸ்திரேலியா அணியினர் செய்வதில்லை. ஆனால் அணியின் உதவியாளர்கள் இந்த வேலையை செய்கிறார்கள். இதுபோன்ற ஒரு விஷயம் 2007 மற்றும் 2008 ம் ஆண்டு நடைபெற்ற ஒன்றுதான் என்றும் கூறியுள்ளார்.