சூர்யாவை மீண்டும் சர்ச்சையில் சிக்க வைக்கும் காயத்ரி ரகுராம்!

Photo of author

By Parthipan K

சூர்யாவை மீண்டும் சர்ச்சையில் சிக்க வைக்கும் காயத்ரி ரகுராம்!

Parthipan K

நீட் தேர்வு பயத்தால் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மாணவி அனிதா துவங்கி பல்வேறு மாணவர்கள் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் நிலவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரியலூரில் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த வருட நீட் தேர்விற்கு 1 நாளைக்கு முன்பாக அச்சத்தின் காரணமாக ஜோதி தற்கொலை செய்து கொண்டார். ஜோதி தற்கொலை செய்து கொண்ட அன்றே மற்றொரு மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சம் இல்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிடுகிறது’ என்று கூறியிருக்கிறார்.

இந்த அறிக்கைக்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்தாலும் ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பை அதிக அளவில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் பாஜக  தொண்டரான காயத்ரி ரகுராம்  ஏற்கனவே சூர்யாவை விமர்சித்து    டுவிட்டரில் ஒரு கேள்வியை எழுப்பினார்.

மேலும் தற்போது நடிகர் சூர்யா புத்தகம் வெளியிடுவது போன்ற ஒரு புகைப்படத்தினை பதிவிட்டு காயத்ரி ரகுராம் “புத்தகத்தை வெளியிட்டு இப்பொழுது இரட்டை வேடம் போடுகிறார்கள்” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.சூர்யாவின் இந்த புகைப்படம் 2017 ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி நடந்த விழாவின் புகைப்படம்.இந்த விழாவின் தலைப்பை நீட் மொழி சவால்களும் பயிற்றுமொழி சிக்கல்களும் என்பதுதான்.மேலும் இதனை பார்த்த சூர்யாவின் ஒரு ரசிகன் சூர்யாவிற்கு ஆதரவாகவும் காயத்ரிக்கு எதிராகவும் மற்றொரு புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார்.