மிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் மறையும் நாள்!!
மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள் மறையும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே இரண்டு நாட்களாக பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் சற்று ஒற்றுமை உண்டாகும்.
வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி இன்றைய தினம் வரலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தை இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய புள்ளிகளாக பேசப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த சில பிரச்சனைகளுக்கு விடை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த மந்த நிலை அகலும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே நிறைவேறும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆன வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.