மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள்!!

0
89
#image_title

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள். இன்றைய தினம் சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருந்து விலகுவதால் உங்கள் வேலைகளை அருமையாக ஆரம்பிக்கலாம். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகி சந்தோஷத்தை கொடுக்கும் நாளாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும் மற்றும் கூட்டாளிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். அரசியலில் இருக்கும் நண்பர்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வேலை வாய்ப்புகளில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அகலும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் மறைந்து மருத்துவச் செலவுகள் குறையும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு நல்ல தகவல் ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குரு பகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani