மீண்டும் பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்!

Photo of author

By Rupa

மீண்டும் பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்!

உலகம் முழுவதும் இந்த கொரானா தொற்றானது மக்களை பெருமளவு பாதிப்படைய செய்தது.இதைத்தொடர்ந்து நாடெங்கும் ஊரடங்கு போடப்பட்டது.மக்கள் வீட்டினுள்ளே கொரோனா அச்சத்தில் முடங்கி கிடந்தனர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை பயின்று வந்தனர்.

கடந்த ஆண்டு பயின்ற 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பால் தேர்வுகள் நடத்தப்படவில்லை.ஆகையால் பள்ளி கல்வித்துறை அவர்களுக்கு ஆல் பாஸ் செய்து உயர் கல்விக்கு செல்ல ப்ரமோஷன் செய்தனர்.இதைக்கேட்ட மாணவர்கள் பெருமளவு மகிழ்ச்சியடைந்தனர்.கடந்த வருடம் 10 வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் எழுதிய அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வுகளை வைத்து மதிப்பெண்களை முடிவு செய்தனர்.

இந்த வருடம் 10 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது.இவர்களில் பலர் ஆன்லைனில் பாடங்களை படிக்காததால் இந்த வருட பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது.அனைத்து மாணவர்களுக்கு பொதுத்தேர்வின்றி ஆல் பாஸ் செய்யப்பட்டது.மாணவர்கள் மீண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.

இவர்கள் எந்த வித தேர்வும் எழுதாத காரணத்தால் மாணவர்களின் மதிப்பெண்களை மதிப்பிட முடியவில்லை.ஆகையால் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு திறனறிவுத்தேர்வு நடத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.இத்தேர்வு நடத்துவதன் மூலம் மட்டுமே 10 யிலிருந்து  11 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களின் குரூப்பை பிரிக்க முடியும் என தனியார் பள்ளிகள் கூறுகின்றனர்.இச்செய்தியை கேட்ட தனியார் பள்ளி மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இத்தேர்வானது சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.