10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி !அமைச்சர் தகவல்!!

Photo of author

By Parthipan K

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி ! அமைச்சர் தகவல்!

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று நாடெங்கும் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்கிற சந்தேகம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நிலவி வருகிறது.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை இதுவரை வெளியிடவில்லை. திருப்புதல் தேர்வு தேதியும் இன்னும் அறிவிக்காமல் இருந்து வருவது பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகத்தை ஏற்டுத்தியுள்ளது. மார்ச் மாதத்திற்குள் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டிய நிலையில் ஒமிக்ரான் தொற்றின் பரவல் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை கோட்டுர்புரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி கல்வித்ததுறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு கல்வித்துறை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பு இல்லாத கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டு அதன்படி 1500 பள்ளி கட்டிடங்களை இடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். மேலும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை துன்புறுத்தல் நடைபெறுவது குறித்து பேசுகையில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை அளிக்க அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்படும் என்று அகர் கூறினார்.

மேலும் பொதுத்தேர்வு குறித்த கேள்விக்கு நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று கூறினார். பொதுத்தேர்வு ஏப்ரல் இறுதியில் மே மாதத்தில் கண்டிப்பாக நடத்தப்படும் என்று கூறினார்.