10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை! மாணவர்கள் திடீர் பதற்றம்!

Photo of author

By Rupa

10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை! மாணவர்கள் திடீர் பதற்றம்!

கொரோனா தொற்று காரணத்தால் மாணவர்கள் ஓராண்டு காலம் பள்ளிக்கு வராமல் இருந்தனர்.மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடந்தப்பட்டது.இந்நிலையில் சில தளர்வுகள் கடந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.இதையடுத்து பொது தேர்வு நடத்தும் வகுப்புகளுக்கு மட்டும் முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தவகையில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு ஜனவரி 19 தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.பொதுத்தேர்வுகள் வரும் நிலையில் அவர்களுக்கு மற்ற மாணவர்களைவிட முன்கூட்டியே நேரடி வகுப்புகள் தொடங்கிவிட்டன.இதையடுத்து பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள்  திறக்கப்படுவதை குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பொதுதேர்வுக்கான அட்டவணை எப்போது வெளியாகும் என மாணவர்கள் எத்ரிபார்த்து வரும் நிலையில் சிபிஎஸ்சி பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 4 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 10 ஆம் தேதி முடிகிறது என அறிவிப்புகள் வெளியிட்டனர்.செய்முறை தேர்வுகள்  மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

இதையடுத்து மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் பொதுத் தேர்வு தேதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை செங்கோட்டையன் பேசியுள்ளார்.ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியது,10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் விரைவில் அரிவிக்கப்படும்.மேலும் டிஆர்பி தேர்வு எழுத 45 வயது மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்க ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.