கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மருத்துவ முகாம்! அசத்தும் தேனி மாவட்டம்!  

0
87
Union Committee meeting held in Theni! Do you know how many resolutions were passed?
Union Committee meeting held in Theni! Do you know how many resolutions were passed?

கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மருத்துவ முகாம்! அசத்தும் தேனி மாவட்டம்!

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டில் தேனி மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ் பி டி ஸ்டீபன்,அவர்களின் ஏற்பாட்டில் கழக துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்  இ.பெரியசாமி.BA.BGL.MLA அவர்களின் ஆலோசனைப் படியும்தேனி வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு தங்க தமிழ்ச்செல்வன் அவர்களின் வழிகாட்டுதலின் படி பொது மருத்துவ முகாமை நடத்தினர்.

மேலும் இவர்களோடு இணைந்து பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்  திருKS. சரவணக்குமார்,மற்றும் பெரிய வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் திரு.LM.பாண்டியன்.BA.BL. ,கெங்குவார்பட்டி பேரூர் கழக செயலாளர் எஸ் பி தமிழன் ,தேனி மாவட்ட மாணவர் அணி மற்றும் சக்தி கிளினிக் மற்றும் சக்திபவுண்டேசன் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமை நடத்தினர்.இதில் கெங்குவார்பட்டி சேர்மன் S.தமிழ்ச்செல்வி. துணைச் சேர்மன் த.ஞானமணி. மற்றும் வார்டு கவுன்சிலர் S.கீர்த்தி.ராஜம்மாள்.ராஜவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சக்கரை அளவு, ஹீமோகுளோபின் அளவு,கொழுப்பின் அளவு ,இருதய சுருள் படம் ,காலின் நரம்பின் அதிர்வு பரிசோதனை உள்பட மருத்துவ பரிசோதனைகள் செய்து மருத்துவர்களால் அறிவுரையின் பேரில்  மருந்து மாத்திரைகள் டானிக் போன்றவை வழங்கப்பட்டது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.