உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு!!! பட்டாசு வெடித்து கொண்டாடிய விவசாயிகள்!!!
உலக அளவில் புகழ் பெற்றுள்ள நிலையில் உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதை அடுத்து விவசாயிகள் அனைவரும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு வட்டாரத்திலும் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களுக்கு தனித்துவமான அடையாளம், சட்ட பாதுகாப்பு வழங்குதல் ஆகியவற்றிற்காக இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் விற்கப்படும் மல்லி, விருதுநகரில் விற்பனை செய்யப்படும் செடிபுட்டா சேலைகள், ஆத்தூரில் விற்பனை செய்யப்படும் வெற்றிலை, தூத்துக்குடி மக்ரோண் போன்ற பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை சார்பில் உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி பகுதி உள்ளது. உடன்குடியில் உள்ள காரத்தன்மை கொண்ட மணலில் விளையும் பனை மரங்களில் இருந்து கிடைக்கும் பதனீருக்கு தனிச்சுவை உள்ளது. அதே போல அங்க தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றிற்கு நகைச்சுவை உள்ளது. மேலும் இதில் மருத்துவ குணங்கள் அதிகளவில் உள்ளது. மற்ற இடங்களில் இருந்து கிடைக்கும் கருப்பட்டியை விட உடன்குடியில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு உலக அளவில் மவுசு இருக்கின்றது.
எனவே உலக அளவில் பிரபலமாக இருக்கும் இந்த உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கவேண்டும் என்று இப்பகுதியில் உள்ள பனை தொழிலாளிகள், விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
சமீபத்தில் திமுக கட்சியின் எம்.பி கனிமொழி அவர்கள் உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது உடன்குடி கருப்பட்டிக்கு அதிகாரப்பூர்வமாக புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு அப்பகுதி விவசாயிகள், பனை தொழிலாளிகள், பொது
மக்கள் என அனவைரும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் உடன்குடி வட்டார பனங்கருப்பட்டி கற்கண்டு தயாரிப்பு நல அமைப்பு சார்பாக அந்த அமைப்பின் தலைவர் சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் செயலாளர் ஷேக் முகமது முன்னிலையில் உடன்குடி மெயின் பஜார் பகுதியில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கினர்.