தண்ணீருக்கும் களைக்கொல்லி மருந்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குடித்த ஆசிரியர்!!! பரிதாபமாக பலி!!!

0
38
#image_title

தண்ணீருக்கும் களைக்கொல்லி மருந்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குடித்த ஆசிரியர்!!! பரிதாபமாக பலி!!!

தண்ணீர் எது களைக்கொல்லி மருந்து எது என்று வித்தியாசம் தெரியாமல் களைக்கொல்லி மருந்தை குடித்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

சேலம் மாவட்டத்தில் மல்லூர் அருகே பாலம்பட்டியில் 25 வயது நிரம்பிய கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். கார்த்தி அவர்கள் காகபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.

வழக்கம் போல காலையில் எழுந்த கார்த்தி அவர்கள் தூக்க கலக்கத்தில் தண்ணீரை குடிப்பதாக நினைத்து அருகில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த களைக்கொல்லி மருந்து வேலை செய்ய கார்த்தி அவர்கள் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.

கார்த்தி கீழே விழுந்து கிடந்ததை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஆட்டையாம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு கார்த்தி அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தும் அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை. இதனால் கார்த்தி அவர்கள் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.