ஒரே நேரத்தில் கமல்-ரஜினி படங்களில் நடிக்கும் ‘கைதி’ நடிகர்!

Photo of author

By CineDesk

ஒரே நேரத்தில் கமல்-ரஜினி படங்களில் நடிக்கும் ‘கைதி’ நடிகர்!

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’கைதி’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த வெற்றியை அடுத்து அவர் தற்போது விஜய் நடிக்கும் ’தளபதி 64’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் கமல்ஹாசன் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’கைதி’ திரைப்படத்தில் கார்த்தியை அடுத்து முக்கிய வேடத்தில் நடித்தவர் ஜார்ஜ் மரியான். காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் கெரக்டரில் நடித்த இவரது நடிப்பு விமர்சகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் இவர் சமீபத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்ததே. இதனையடுத்து தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 168’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்று நடைபெற்ற தலைவர் 168’ பட பூஜையில் ஜார்ஜ் மரியான் கலந்து கொண்டதில் இருந்து இவர் இந்த படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. ஒரே நேரத்தில் கமல், ரஜினி ஆகியோரின் படத்திலும் ஜார்ஜ் மரியான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.