மும்பையில் இன்று மூன்றாவது போட்டி இந்தியாவில் ஆடும் லெவெனில் யார்? யார்?

0
83

மும்பையில் இன்று நடைபெறும் 3-வது மற்றும் இறுதி டி20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இருக்கிறது.

ஆனால், கடந்த இரு போட்டிகளிலும் இந்திய அணிக்கு பேட்டிங், பந்துவீச்சில் கடும் சவால் விடுத்த மே.இ.தீவுகள் இன்றைய ஆட்டத்திலும் கடுமையான சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
முதலாவது டி20 போட்டியில் 207 ரன்களைக் குவித்த மே.இ.தீவுகள் அணி, 2-வது டி20 போட்டியில் 170 ரன்களை அனாசயமாக எட்டி வெற்றி பெற்றது. பவர் ஹிட்டர்ஸ் அதிகம் இருக்கும் மே.இ.தீவுகள் அணியின் பேட்டிங் இந்திய அணிக்கு நிச்சயம் சவாலாக இருக்கும்.
இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்று சமநிலையில் இருப்பதால், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

கேப்டன் விராட் கோலி முதல் போட்டியில் வெளுத்து வாங்கினார், ஆனால் 2-வது ஆட்டத்தில் விரைவாக வெளியேறினார். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் கோலியின் தனித்தன்மை ஆட்டம் நிச்சயம் வெளிப்படும். இதுதவிர நடுவரிசையைபலப்படுத்த ஸ்ரேயாஸ் அய்யர் இருப்பது கூடுதல் வலுவாகும். கடந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தால் கலக்கிய ஷிவம் துபே சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். இவரின் ஆட்டம் இன்றும் தொடர்ந்தால் கூடுதல் பலம்.

பீல்டிங்கிலும் வாஷிங்டன் சுந்தர் மந்தமாக செயல்படுகிறார்.கடந்த ஆட்டத்தில் சிம்மின்ஸுக்கு நழுவவிட்ட கேட்சால் ஆட்டமே மாறிப்போனது. ஆதலால், வாஷிங்டனுக்கு பதிலாக குல்தீப்யாதவ் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது

இந்திய அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும் கடந்த இரு போட்டிகளிலும் சுமார் ரகம் என்றுதான் சொல்ல முடியும். முதல் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியை 200 ரன்களுக்கு மேல் அடிக்க விட்டனர். 2-வது போட்டியிலும் 170 ரன்கள் எடுத்தும் பந்துவீச்சில் கட்டுப்படுத்த முடியவில்லை.
புவனேஷ்வர் குமார், தீபக் சஹர் இருவரும் ரன்களை வாரி வழங்குகின்றனர்.

ஆதலால், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக, முகமது ஷமி இன்று களமிறங்கக்கூடும். பீல்டிங்கிலும் இந்திய அணி கவனம் செலுத்துவது அவசியம் இல்லாவிட்டால் எவ்வளவு ரன்கள்அடித்தாலும் பயனில்லை.

சமபலம் கொண்ட இரு அணிகளும் மோதுவதால் இன்றைய போட்டி மிக விறுவிறுப்புக்கு குறை ஏதும் இருக்காது இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியம்ல் நடக்கும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

author avatar
CineDesk