உங்களில் சிலர் ஒற்றைத் தலைவலி பாதிப்பால் அவதியடைந்து வருவீர்கள்.இந்த ஒற்றைத் தலைவலி பாதிப்பை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து தற்பொழுது விளக்கப்பட்டிருக்கிறது.இதை பின்பற்றி ஒற்றைத் தலைவலியை விரட்டுங்கள்.
ஒற்றைத் தலைவலிக்கான காரணங்கள்:
1)மன அழுத்தம்
2)தூக்கமின்மை
3)மதுப் பழக்கம்
4)மோசமான வாழ்க்கை முறை
ஒற்றைத் தலைவலி அறிகுறிகள்:-
1)ஒருபக்கமாக தலைவலி வருதல்
2)வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு
3)மங்கலான கண் பார்வை
4)மலச்சிக்கல்
5)மனநிலை மாற்றம்
6)அதிக உடல் சோர்வு
7)எரிச்சல் உணர்வு
8)பேசுவதில் சிரமம் ஏற்படுதல்
9)பதட்டம்
ஒற்றைத் தலைவலி குணமாக என்ன செய்ய வேண்டும்?
உங்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வருகிறது என்றால் நீங்கள் அதிகமாக தண்ணீர் பருக வேண்டும்.தண்ணீர் பருகுவதன் மூலம் ஒற்றைத் தலைவலி பாதிப்பை முழுமையாக சரி செய்து கொள்ள முடியும்.
ஒற்றைத் தலைவலி பாதிப்பை அடிக்கடி சந்திப்பவர்கள் நன்றாக உறங்க வேண்டும்.மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் செய்யக் கூடாத விஷயங்கள் என்ன?
காஃபின் நிறைந்த பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும்.மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஒற்றைத் தலைவலியை குணமாக்கும் சித்த வைத்தியம்:
தேவையான பொருட்கள்:
1)சுக்கு
2)இஞ்சி
3)அதிமதுரம்
செய்முறை விளக்கம்:
ஒரு பீஸ் மற்றும் இஞ்சி துண்டை லேசாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.
அதன் பின்னர் இடித்த சுக்கு,இஞ்சியை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் சிறிது அதிமதுரத்தை அதில் போட்டு கொதிக்க வைத்து வடித்து பருகினால் ஒற்றைத் தலைவலி பாதிப்பு முழுமையாக குணமாகும்.