அடைப்பு நீங்கி நன்றாக மூச்சுவிட.. இந்த எண்ணெய் மூன்று சொட்டு மூக்கு ஓட்டையில் விடுங்க!!

Photo of author

By Divya

அடைப்பு நீங்கி நன்றாக மூச்சுவிட.. இந்த எண்ணெய் மூன்று சொட்டு மூக்கு ஓட்டையில் விடுங்க!!

Divya

சளி தொந்தரவு அதிகமானால் மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சிவிடுதலில் சிரமம் ஏற்படும்.மூக்கடைப்பு சில தினங்களில் குணமாகிவிடும் என்றாலும் அவை கடும் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை செய்து மூக்கடைப்பு பாதிப்பில் இருந்து எளிதில் மீளவும்.

டிப்ஸ் 01:

குறுமிளகை கூர்மையான ஊசி அல்லது கம்பியில் குத்தி நெருப்பில் சுட்டு நுகர்ந்தால் மூக்கடைப்பு சரியாகும்.

டிப்ஸ் 02:

ஒரு துண்டு சுக்கு மற்றும் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை அரைத்து ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் மூக்கடைப்பு குணமாகும்.

டிப்ஸ் 03:

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் சிட்டிகை அளவு மஞ்சள் கலந்து பருகினால் மூக்கடைப்பு பாதிப்பு குணமாகும்.

டிப்ஸ் 04:

துளசி,வெற்றிலை மற்றும் கற்பூரவல்லி இலையை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடித்து பருகி வந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

டிப்ஸ் 05:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கற்பூரத்தை போட்டு சுவாசித்தால் மூக்கடைப்பு குணமாகும்.

டிப்ஸ் 06:

தேங்காய் எண்ணெய் சூடாக்கி அதில் கற்பூரத்தை போட்டு கரைத்து வெது வெதுப்பான சூட்டில் மூக்கின் மீது தடவினால் மூக்கடைப்பு குணமாகும்.

டிப்ஸ் 07:

தேங்காய் எண்ணெயில் கருஞ்சீரகப் பொடி போட்டு சூடாக்கி நாசி துவாரத்தில் விட்டால் நிமிடத்தில் மூக்கடைப்பிற்கு தீர்வு கிடைக்கும்.

டிப்ஸ் 08:

கற்பூரவல்லி இலையை நசுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு லேசாக சூடுபடுத்தி நாசி துவாரத்தில் மூன்று சொட்டு விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.

டிப்ஸ் 09:

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கல் உப்பு போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் மூக்கடைப்பு பிரச்சனை சரியாகும்.