பருவநிலை மாற்றத்தால் தொண்டை கரகரப்பு,தொண்டைப்புண்,இருமல் போன்ற பாதிப்புகளால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.இதை சாதாரண பாதிப்பாக கருதி குணப்படுத்திக் கொள்ள தவறினால் கடுமையான தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும்.
தொண்டை கரகரப்பு,இருமல் நிற்க கீழே சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தேவையான பொருட்கள்:
1)தண்ணீர்
2)கல் உப்பு
செய்முறை:
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து கலக்கி வாயை கொப்பளித்தால் தொண்டை கரகரப்பு,இருமல் பாதிப்பு சரியாகும்.
தேவையான பொருட்கள்:
1)அதிமதுரம்
2)தண்ணீர்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு தேக்கரண்டி அதிமதுரப் பொடி கலந்து தொண்டையில் படும்படி குடித்தால் கரகரப்பு,இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1)இஞ்சி
2)தேன்
ஒரு கப் நீரில் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.பிறகு அதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் தொண்டை கரகரப்பு,இருமல் குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1)எலுமிச்சை சாறு
2)தண்ணீர்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் பாதி எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து வாயை கொப்பளித்து வந்தால் இருமல்,தொண்டைப்புண்,தொண்டை கரகரப்பு உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும்.
தேவையான பொருட்கள்:
1)பால்
2)மஞ்சள் தூள்
செய்முறை:
ஒரு கிளாஸ் சூடான பாலில் சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால் தொண்டை கரகரப்பு,இருமல்,தொண்டைப்புண் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.