முழங்கை கருமை நீங்க! இதனை செய்து பாருங்கள்!  

Photo of author

By Parthipan K

முழங்கை கருமை நீங்க! இதனை செய்து பாருங்கள்!  

Parthipan K

Updated on:

முழங்கை கருமை நீங்க! இதனை செய்து பாருங்கள்!

 

அனைத்து பெண்களும் அவரவர்களின் அழகில் கவனம் செலுத்துவது வழக்கம்தான். பெண்களுக்கு முழங்கை கருமை நீங்கி வெள்ளையாக மாற முதலில் 1ஃ2 கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து கொதிக்க விட்டு பின் அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து அந்த நீரை முழங்கையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும்.

 

மேலும் இவ்வாறு தினமும் செய்து வந்தால் அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கி விரைவில் முழங்கையானது வெள்ளையாகும்.முழங்கை கருமை மறைய பேக்கிங் சோடாவை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முழங்கையில் தடவி சிறிது நேரம் தேய்க்க வேண்டும்.இதனால் அப்பகுதியில் உள்ள கருமை மறைய ஆரம்பிக்கும்.பேக்கிங் சோடாவை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முழங்கையில் தடவி சிறிது நேரம் தேய்க்க வேண்டும்.

 

இதனால் அப்பகுதியில் உள்ள கருமை மறைய ஆரம்பிக்கும்.

முழங்கை மென்மையாக இருக்க

ஒரு பவுலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1ஃ2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் துடைத்து எடுக்க வேண்டும்.இதனால் முழங்கையில் வறட்சி நீங்கி முழங்கை மென்மையாக இருக்கும்.மஞ்சள் தூளை தேன் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் சிறிது நீரால் முழங்கையை 2 நிமிடம் தேய்த்து கழுவ வேண்டும்.