வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்க.. அருகம்புலை இப்படி பயன்படுத்துங்கள்!

Photo of author

By Divya

வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்க.. அருகம்புலை இப்படி பயன்படுத்துங்கள்!

உங்கள் வீட்டில் சூழுந்துள்ள கெட்ட சக்திகளால் நாம் தொடங்கும் நல்ல காரியங்கள் அனைத்தும் தடைபடும்.

எதிர்மறை எண்ணங்கள் அதிகம் ஏற்பட்டு மன நிம்மதியை இழந்து வாழ்வை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.

தீய சக்தி, பில்லி, சூனியம் ஏவல், கண் திருஷ்டி ஆகியவை நம் உழைப்பு, முன்னேற்றம் பிடிக்காதவர்களாக வைக்கப்படும் ஒரு மோசமான விஷயம் ஆகும்.

இவ்வாறு செய்யும் நபர்களால் நம் குடும்பமும் சேர்ந்து கஷ்டப்படும்… பொறாமை.. வெறுப்பு உணர்வு, அடுத்தவர்கள் வளர்ச்சியால் வயிறு எரிச்சல் ஏற்படும் நபர்களிடம் இருந்து நம்மை காத்துக் கொள்ள அவசியம் அருகம்புல் சாம்பிராணியை பயன்படுத்தவும்.

அருகம்புல் விநாயகருக்கு உகந்த பொருள். இந்த அருகம்புல் பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி, கெட்ட சக்தி ஆகியவற்றை அடியோடு நீக்கும் சக்தி கொண்டிருக்கிறது.

இந்த அருகம்புல்லில் மாலை கட்டி விநாயகருக்கு சாற்றி பிறகு அதை வீட்டிற்கு கொண்டு வரவும்.

கரித்துண்டை சாம்பிராணி புகை போடும் கரண்டியில் வைத்து அருகம்புல்லை போட்டு வீடு முழுவதும் புகை போடவும்.

இவ்வாறு செய்வதினால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி ஆகியவை அடியோடு நீங்கும்.