நம் உடலில் கல்லீரலுக்கு கீழ் வயிற்றின் வலப்பக்கத்தில் அமைந்துள்ள உறுப்பு பித்தப்பை.கல்லீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் வேலையை பித்தப்பை செய்கிறது.பித்தப்பையில் செரிமான திரவமானது சேகரிக்கப்பட்டு அவை சிறுகுடல் வழியாக வெளியேற்றப்படுகிறது.ஒருவேளை இந்த பித்தப்பையில் கற்கள் உருவாகிவிட்டால் அவை கடுமையான வலி மற்றும் உடல் நலக் கோளாறுக்கு வழிவகுத்துவிடும்.
பித்தப்பை கல் அறிகுறிகள்:
*மஞ்சள் காமாலை
*தோல் அலர்ஜி
*பசி இழப்பு
*வயிறு வீக்கம்
*வயிற்றுப்போக்கு
*தொண்டை வலி
பிதைப்பை கற்களை கரைக்கும் ஜூஸ் செய்முறை:-
1)கற்பூரவல்லி இலை
2)முசுமுசுக்கை
3)சுக்கு
ஒரு கப் அளவிற்கு கற்பூரவல்லி இலையை சேகரித்து கொள்ளுங்கள்.பிறகு இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யுங்கள்.
பிறகு ஒரு காட்டன் துணியில் கற்பூரவல்லி இலையை போட்டு துடைத்து வெயிலில் நன்றாக காயவைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு தயாராக உள்ள கற்பூரவல்லி இலையை பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து மூச்சுமுசுக்கை மற்றும் தோல் நீக்கிய சுக்கை மிக்சர் ஜாரில் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ஈரம் இல்லாத டப்பா ஒன்றை எடுத்து கற்பூரவல்லி பொடி,முசுமுசுக்கை சுக்கு பொடியை கொட்டி மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதற்கு அடுத்து பாத்திரத்தை எடுத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.தண்ணீர் சிறிது சூடானதும் சிறிதளவு அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகுங்கள்.
- இந்த கற்பூரவல்லி பானம் பித்தப்பையில் உள்ள கற்களை கரைத்து பித்தப்பையை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.அதேபோல் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் வேலையையும் கற்பூரவல்லி செய்கிறது.