பணக் கஷ்டம் நீங்கி.. வீட்டில் பணம் தங்க எளிய பரிகாரம்!!
இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம். பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது. நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம். இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் தான். பணக் கஷ்டம் நீங்கி பணம் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்வது நல்லது.
பணக் கஷ்டம் நீங்கி.. வீட்டில் பணம் தங்க எளிய பரிகாரம்:-
மாதத்தில் எதாவது இரண்டு வெள்ளிக்கிழமை இதை செய்தால் போதும்.
ஒரு பித்தளை அல்லது செம்புத் தட்டில் மஞ்சள், குங்குமம் வைத்து அதன் மீது மருதாணி,இலைகளை பரப்பிக் கொள்ளவும். பின்னர் மருதாணி இலை மேல் மூன்று ஏலக்காய், மூன்று கிராம்பு(இலவங்கம்), 11 ஒரு ரூபாய் நாணயங்களை தட்டில் ஆங்காங்கே பரப்பி வைக்கவும்.
மருதாணி இலை கிடைக்காதவர்கள் மருதாணி பவுடர் உபயோகிக்கலாம்.
பிறகு 1 அகல் விளக்கை எடுத்து மஞ்சள் குங்குமம் வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளவும். பின்னர் இரண்டு பஞ்சு திரி போட்டு அந்தத் தட்டின் நடுவில் வைத்து விளக்கு ஏற்றவும்.
பிறகு, விளக்கு எரிந்து முடிந்த பிறகு 2 மணி நேரம் கழித்து 1 ரூபாய் நாணயங்களை தனியாக எடுத்து ஒரு டப்பாவில் போட்டு அதில் பணம் வைத்து எடுக்கவும்.
இந்த ஒரு ரூபாய் நாணயங்களை மட்டும் ஒருபோதும் செலவு செய்யக் கூடாது.
மருதாணி, கிராம்பு(இலவங்கம்), ஏலக்காய் என அனைத்தையும் எதாவது செடிகளில் போட்டு விடவும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை இரண்டு முறை செய்யும் போதே வீட்டில் நன்கு பணம் சேர ஆரமிக்கும்.