வாயில் வீசும் கெட்ட வாடை நீங்க.. இந்த பொருட்களை பொடித்து சாப்பிடுங்கள் போதும்!!

Photo of author

By Divya

Bad Breath: உங்கள் வாயில் அதிகளவு பாக்டீரியா கிருமிகள் மற்றும் அழுக்குகள் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.இதனால் தர்மசங்கடமான சூழலை நீங்கள் சந்திக்க நேரிடும்.

வாய் துர்நாற்றம் ஏற்பட காரணங்கள்:

*வறண்ட வாய்
*புகைபிடித்தல்
*சொத்தைப்பல்
*பல் துலக்காமை
*அல்சர்
*வாய்ப்புண்
*செரிமானக் கோளாறு
*மது பழக்கம்
*நாக்கு சுத்தமின்மை

வாய் துர்நாற்றம் கட்டுப்பட வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

1)கொட்டை பாக்கு – 10
2)இலவங்கம் – 10
3)பட்டை துண்டு – 2
4)சோம்பு – 1/2 ஸ்பூன்
5)வெள்ளை கற்கண்டு – 1/4 ஸ்பூன்

செய்முறை விளக்கம்:-

**முதலில் மிக்சர் ஜாரை எடுத்துக் கொள்ளவும்.அடுத்து பத்து கொட்டை பாக்கை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

**அதன் பிறகு பத்து இலவங்கம் மற்றும் இரண்டு துண்டு பட்டையை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

**அதன் பிறகு அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் அதாவது சோம்பு மற்றும் கால் தேக்கரண்டி வெள்ளை கற்கண்டை மிக்சர் ஜாரில் போட்டு நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.

**இதற்கு அடுத்து ஒரு ஈரம் இல்லாத பௌவுல் எடுத்து அரைத்து வைத்துள்ள கொட்டை பாக்கு பொடியை அதில் கொட்டி கொள்ளவும்.

**பிறகு கிராம்பு மற்றும் பட்டை தூளை அதில் கொட்டி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு சோம்பு(பெருஞ்சீரகம்) பவுடரை கொட்டி நன்றாக மிக்ஸ் செய்யவும்.

**இந்த பொடியை வாய் பல் துலக்கிய பிறகு சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்ற பிரச்சனை அகலும்.

தேவையான பொருட்கள்:-

1)வர கொத்தமல்லி விதை – 20 கிராம்
2)துளசி இலைகள் – கால் கப்
3)புதினா இலைகள் – இரண்டு ஸ்பூன்

செய்முறை விளக்கம்:-

**முதலில் துளசி மற்றும் புதினா இலைகளை வெயிலில் நன்றாக காய வைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து வர கொத்தமல்லி விதையை மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை அரைத்து வைத்துள்ள துளசி புதினா பொடியில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)உப்பு – ஒரு ஸ்பூன்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

**பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்தி வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் அகலும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு ஸ்பூன்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி லேசாக சூடுபடுத்துங்கள்.பிறகு இந்த நீரை ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளுங்கள்.

**அதன் பிரகள ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை அதில் ஊற்றி பருகினால் வாய் துர்நாற்றம் அகலும்.