நாள்பட்ட மலக்குடலில் உள்ள கழிவுகள் வெளியேற! மலச்சிக்கல் சரியாக!

Photo of author

By Kowsalya

மலச்சிக்கல்தான் நம் உடலில் அதிக பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயம். நாம் தினமும் இயற்கை உபாதைகளை கழிக்கவில்லை என்றால் அந்த கழிவுகள் உடலிலேயே தங்கி விட்டால் அதிகமான பிரச்சினையை ஏற்படுத்தி உடல் முழுவதும் சோர்ந்து காணப்படும். மலச்சிக்கலால் மூலம், உடல் எடையை அதிகரிப்பு, சர்க்கரைநோய், அழுத்தம் ஆகிய பலவிதமான நோய்கள் மலச்சிக்கலால் வரக்கூடும்.

இதனை ஒரே நாளில் தீர்க்கக் கூடிய அற்புதமான தீர்வை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. ஆவாரம் பூ பொடி

2. மூக்கிரட்டை பொடி

செய்முறை:

1. ஆவாரம் பூ பொடி என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை நிலவாகை பொடி என்றும் கூறுவார்கள். இதனை வாங்கிக் கொள்ளவும்.

2. பின் மூக்கிரட்டை பொடி என்று நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளவும்.

3. இரண்டும் சம அளவில் எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

1. இதனை ஒரு ஸ்பூன் எடுத்து மிதமான சூடான தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர ஒரே நாளில் உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து விதமான மலச்சிக்கலையும் வெளியேற்றிவிடும்.

இதை சாப்பிட்ட பிறகு கொஞ்சம் வயிற்றுவலி ஏற்படும் பயந்துவிடாதீர்கள். இது உடல் கழிவை நீக்கும் அதற்கான அறிகுறியே.

ஒரு நாளைக்கு 4 முதல் 5 வரை மலம் கழிக்க நேரிடும். அதனால் பயந்து விடாதீர்கள். உங்களது அனைத்து கழிவுகளையும் மலக் குடலில் தங்கியுள்ள அனைத்து கழிவுகளை நீக்கிவிடும்.

இதனை நீங்கள் வாரம் ஒரு முறை செய்தால் போதும். உங்களது மலச்சிக்கலையும் நீக்கி மூலம் போன்ற நோய்களை வராமல் தடுத்து விடும்.

அதேபோல் ஆவாரம் செடி மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இதனை உள்ளுக்குள் நீங்கள் எடுத்துக்கொள்ளும் பொழுது அனைத்து விதமான பிரச்சனைகளை சரிசெய்யும். மேலும் மூக்கிரட்டை சிறுநீரகப் பிரச்சனைக்கு ஒரு அருமருந்தாக பயன்படுகிறது. எனவே அதனை நீங்கள் தொடர்ந்து உட்கொள்ளும் பொழுது கிட்னி பிரச்சனை வராமல் உங்களை பாதுகாக்கும்.