நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் முக்கிய ஆப்பாக Gpay உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு ஜிபே வில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ஸ்க்ராட்ச் கார்ட் மூலம் 1001 ரூபாய் கேஷ் பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கான சில படிநிலைகளும் ஜிபே வில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும், குறிப்பாக அக்டோபர் 29ஆம் தேதியில் இருந்து பரிவர்த்தனை செய்த கஸ்டமர்களுக்கு இது பொருந்தும்.
இந்தியாவில் கோடிக்கணக்கான பேங்க் கஸ்டமர்கள் பயன்படுத்தி வரும் கூகுள் பே ஆப் மூலம், ஒவ்வொரு பரிவர்த்தனை செய்யும்போதும் ஸ்கிராட்ச் கார்டு பெற்று கொள்ளலாம். இந்த ஸ்கிராட்ச் கார்டில் கேஷ்பேக் அல்லது ஷாப்பிங் சலுகைகள் இருக்கும். இது நம் அனைவருக்கும் தெரிந்ததே.
இதற்காக சில வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு :-
ரூ.1001 கேஷ்பேக் பெற அக்டோபர் 29ஆம் தேதியில் இருந்து பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும். இந்த பரிவர்த்தனை மூலம் 6 கூகுள் பே லட்டுக்களை (Google Pay Laddoos) கஸ்டமர்கள் சேகரிக்க வேண்டும். உங்களது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஸ்கிராட்ச் கார்டை போன்று ஒரு லட்டு உங்களுக்கு கிடைக்கும் என்பது இதன் விதிமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதில் 6 லட்டுகளையும் பெற வேண்டும் என்றால், 6 விதமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டு இருக்க வேண்டும் என்பது இதன் விதி ஆகும். உதாரணமாக, நம்முடைய ஜிபே மூலம் மற்றொருவருக்கு பணம் அனுப்புவதால் ஒரு லட்டு கிடைக்கும். இதனைப் போன்று ரீசார்ஜ் செய்தால் ஒரு லட்டு, கரண்ட் பில் கட்டப்பட்டிருந்தால் ஒரு லட்டு என ஆறு நிபந்தனைகள் உள்ளன.
இவற்றை அக்டோபர் 26ம் தேதியிலிருந்து நீங்கள் சேகரித்து வைத்திருந்தால் அதனை எவ்வாறு க்ளைம் செய்வது என்பதனை இங்கு காணலாம்.
✓ முதலில் உங்களது கூகுள் பே ஆப்-ஐ ஓப்பன் செய்து ஹோம் பக்கத்திலேயே கீழே ஸ்ரோல் செய்து கொள்ளுங்கள்.
✓ ஆஃபர்கள் மற்றும் ரிவார்டுகள் (Offers and Rewards) டேப் தோன்றும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
✓ இப்போது, 6 லட்டுக்களுக்கான ஐகான் தோன்றும். அதில் நீங்கள் ஏற்கனவே பெற்ற லட்டுக்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த ஆறு லட்டுகளையும் நீங்கள் பெற்றிருந்தால் கேஷ் பேக் பெறுவதற்கான ஸ்கிராப் கார்டுகள் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த கிளைம் செய்யப்பட்ட ஸ்கிராட்ச் கார்டு மூலம் உங்களுக்கு ரூ.51 முதல் ரூ.1001 வரையில் கேஷ்பேக் கொடுக்கப்படும். இந்த கேஷ்பேக் தொகை வழக்கம்போல உங்களது பேங்க் அக்கவுண்ட்டில் கிரெடிட் செய்யப்படும்.