குண்டு உடல் ஒல்லியாக.. இந்த டீயை சுவையுங்கள்!! உட்கார்ந்த இடத்திலிருந்தே  10 கிலோ குறைக்கலாம்!!

Photo of author

By Divya

குண்டு உடல் ஒல்லியாக.. இந்த டீயை சுவையுங்கள்!! உட்கார்ந்த இடத்திலிருந்தே  10 கிலோ குறைக்கலாம்!!

உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதால் எடை கூடுகிறது.இதனால் உடல் அழகு குறைவதோடு உயிருக்கு ஆபத்தான நோய்கள் அழையா விருந்தாளிகளாக தொற்றி விடும்.உடல் எடை தானாக கூடுவதில்லை.நாம் கடைபிடிக்கும் உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை பொறுத்து தான் உடல் எடை கூடுகிறது.

எண்ணையில் வறுத்த பொறித்த உணவுகளை ருசித்தல்,அளவிற்கு அதிகமான அசைவ உணவுகள்,கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளால் உடல் எடை கூடுகிறது.உடல் எடை கூடுவது அறிந்தால் உடனே உங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றுவது நல்லது.இல்லையேல் பின்னாளில் உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் சிரமப்படுவீர்கள்.

இன்று சிறு குழந்தைகள் கூட உடல் எடை அதிகரிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்,டயட் இருந்தால் வழிகளை பின்பற்றி வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு சிம்பிள் டிப் தெரிந்து கொண்டால் நோகாமல் பலனை அனுபவிக்க முடியும்.

உடல் எடையை குறைக்க உதவும் மூலிகை டீ

தேவைப்படும் பொருட்கள்:-

*பெருஞ்சீரகம்
*அஜ்வைன்
*வர கொத்தமல்லி விதை
*மஞ்சள் பொடி

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி அஜ்வைன் மற்றும் 1 தேக்கரண்டி பெருஞ்சீரகப் பொடி சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

அதன் பின்னர் 1 தேக்கரண்டி வர கொத்தமல்லி விதையை உரல் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து பெருஞ்சீரகம் மற்றும் அஜ்வைன் ஊறவைத்த தண்ணீரை ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் கொரகொரப்பாக அரைத்த கொத்தமல்லி தூளை சேர்த்து 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் பொடி சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.அதன் பிறகு இந்த பானத்தை ஒரு தட்டு போட்டு 5 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.

பின்னர் இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேவையான அளவு தேன் சேர்த்து கலக்கி குடிக்கவும்.இவ்வாறு வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்புகள் கரைந்து உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.