ஆந்திராவில் கல்லாக்கட்டும் பேபி!! உற்சாகத்தில் தேவர கொண்டா ரசிகர்கள்!!
இயக்குனர் சாய் ராஜேஷ் தற்போது பேபி படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தின் ஹீரோவாக விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவர கொண்டா நடித்துள்ளார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிகராக உள்ளார். மேலும் இவர் தொரசாணி, மிடில் கிளாஸ் மேலடிஸ், புஷ்பக விமானம் மற்றும் தற்போது பேபி படத்தில் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் வைஷ்ணவி, விராஜ் அஸ்வின் போன்ற பிரபல நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து பேபி என்ற திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரையங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் தெலுங்கு மிளியில் வெளிவந்து. இந்த படத்தில் கதைகளம் காதலியால் ஏமாற்றத்தை உள்ளாகும் நாயகன் பற்றிய கதை ஆகும்.
மேலும் இந்த படம் வந்து 12 நாட்கள் மட்டும் ஆன நிலையில் 70 கோடி வசூல் செய்துள்ளது. அதனையடுத்து பேபி திரைப்படம் வெறும் 7 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட படமாகும். இந்த பேபி படம் ஆந்திர மாநிலத்தில் குறைந்த பட்ஜெட் படத்திற்கு 50 கோடிற்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. மேலும் தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் விஜய் தேவர கொண்டாவை விட அதிக வசூல் என்று தகவல் வந்துள்ளது.