அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
189

தமிழ்நாட்டில் அடுத்த சில மணி நேரங்களுக்கு சென்னை, கடலூர், போன்ற 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, குமரிக்கடல் பகுதிகளில் நிலவிவரும் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததற்கான வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த விதத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் சென்னை, கடலூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபிரிட்டன் மன்னர் முடி சூட்டு விழா! கோகினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணிவாரா கமிலா சார்லஸ்?
Next articleதமிழகத்தில் இத்தனை கடைகளுக்கு மட்டுமே அனுமதி! அமலான புதிய கட்டுப்பாடுகள்!