இனி இ-பாஸ் பெறுவது சுலபம்:! அனைவருக்கும் இ-பாஸ்! தமிழக அரசு அதிரடி!

0
147

தவிர்க்க முடியாத பணிகள் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.மேலும் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றில் தொலைபேசி எண்களை இணைத்தால் இ-பாஸ் நிச்சயமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.தமிழகத்தில் இ-பாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தளர்வு அளிக்கப்பட்டு வருகின்றது.

பொதுமக்களை பாதுகாக்கவும், சிகிச்சை அளித்தும், நோய் தொற்று பரவாமல் கண்காணித்தும் ,
நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், பொது மக்களின் ஒத்துழைப்பு ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தன.

கொரோனா தொற்று கட்டுபடுத்துவதற்காக
திருமணம் ,அவசரமாக மருத்துவ சிகிச்சை, உறவினர் மரணம் ,பணி சம்பந்தமான தொழில், நெருங்கியவர்கள் உறவினர் வீட்டுக்கு விழா செல்வது ஆகிய காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் தற்பொழுது வரை வழங்கப்பட்டு வந்தன.இதிலும் மாவட்டங்களுக்கு உள்ளே மட்டுமே அனுமதித்தனர்.

இந்நிலையில் தற்பொழுது முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழகம் முழுவதும் செல்லவும் (மாவட்டங்களுக்கு இடையே) ஆதார் அட்டை அல்லது ரேஷன் அட்டைகயுடன், தொலைபேசி எண் இணைத்தால் இ- பாஸ் தடையுமின்றி நிச்சயமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாகக் கூறினார்.

பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். நோய்த்தொற்றை பரப்பும் வகையில் மக்கள் அலட்சியம் காட்டாமல், பாதுகப்புடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.இதற்காக மக்கள் அலட்சியம் காட்டாமல் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous articleஇனிப்பு சுவையூட்டும் வேம்பு கசாயம்தயாரிப்பது எப்படி:? தாய்மார்களே இது உங்களுக்கான டிப்ஸ்!
Next articleபிரபல நடிகையின் டீசர் ரிலீஸ்!! ரகளை செய்யும் ரசிகர்கள்!!!