Home Health Tips இனிப்பு சுவையூட்டும் வேம்பு கசாயம்தயாரிப்பது எப்படி:? தாய்மார்களே இது உங்களுக்கான டிப்ஸ்!

இனிப்பு சுவையூட்டும் வேம்பு கசாயம்தயாரிப்பது எப்படி:? தாய்மார்களே இது உங்களுக்கான டிப்ஸ்!

0
இனிப்பு சுவையூட்டும் வேம்பு கசாயம்தயாரிப்பது எப்படி:? தாய்மார்களே இது உங்களுக்கான டிப்ஸ்!

தற்போது மழை சீசன் என்பதால் டெங்கு காய்ச்சல் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.இந்த டெங்கு காய்ச்சலை வராமல் தடுக்க அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிலவேம்பு கசாயம்,பப்பாளி சாரு கசாயம்,போன்றவற்றை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கொடுக்கப்பட்டு வருகின்றது.
சில வீடுகளிலே பப்பாளி இலைச்சாறு கசாயம்,வேம்பு கசாயம்,தயாரித்து தனது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தாய்மார்கள் குடுப்பர்.ஆனால் இது மிகவும் கசப்பாக இருப்பதால் குழந்தைகளாகட்டும் பெரியவர்களாகட்டும் குடிக்க அடம்பிடிப்பர்.அவர்களுக்கு சற்று சுவையூட்டும் வகையில் வேப்பம் பூ கசாயம் எவ்வாறு தயாரிப்பது என்று இதில் காண்போம்.

தேவையான பொருட்கள்
வேப்பம்பூ -சிறிதளவு
வெண்ணெய் -4 டீஸ்பூன் காய்கறிகளை வேக வைத்த தண்ணீர் -1 கப்
எலுமிச்சைசாறு -2 டீஸ்பூன் மிளகுத்தூள் -1 டீஸ்பூன் பனங்கற்கண்டு-4 – டீஸ்பூன் உப்பு (தேவையானவை)

தயாரிக்கும் முறை?

முதலில் ஒரு வாணலியில் நெய் ஊற்றி அது சிறிதளவு சூடான பிறகு சுத்தம் செய்து வைத்த வேப்பம் பூவை வாணலியில் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.பிறகு பனங்கற்கண்டு மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் இந்த கொதிக்க வைத்த தண்ணீரை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி காய்கறிகளுடன் வேகவைத்த தண்ணீரில் இதனை கலந்து,சுவைக்கேற்ப உப்பும் மிளகுத் தூளையும் கலந்து
கொள்ளவேண்டும்.இறுதியில் பிழிந்து வைத்த எலுமிச்சை சாற்றை கலந்து,இதனை மிதமான சூட்டில் குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மேலும் இந்த வேப்பம் பூ கசாயம் பணம் கற்கண்டு போடுவதால் கசப்பு தன்மையை சிறிதளவு குறைந்து விடும்.இதனால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இந்த கசாயத்தை குடிக்கும் போது அவ்வளவாக கசப்புத்தன்மை தெரியாது.இந்த கசாயமானது டெங்கு காய்ச்சல் வராமல் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு மட்டுமே.டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மருத்துவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுவது நல்லது.இந்த கசாயம் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது.காலையில் டீ காபியை தவிர்த்துவிட்டு இந்த கசாயத்தை குடித்தால் நம் உடலில் எந்த நோயும் அண்டாது.

author avatar
Pavithra