நெய் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் இவர்களெல்லாம் தவிர்த்துவிடுவது நல்லது!!

Photo of author

By Rupa

அதிக வாசனை நிறைந்த நெய் உணவில் சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படுகிறது.நெய் இல்லாத இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்காது.இந்த நெய் வெண்ணையை உருக்குவதால் கிடைக்கிறது.இதில் நல்ல கொழுப்பு மற்றும் புரதங்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.

இதில் ஒமேகா 3 கொழுப்பு,வைட்டமின் ஏ,வைட்டமின் ஈ மற்றும் டி அதிகளவில் நிறைந்து காணப்படுகிறது.தினசரி நெய் சாப்பிட்டு வந்தால் ,மூட்டு வலி,சருமப் பிரச்சனை,ஞாபகத் திறன்,தலைமுடி உதிர்வு போன்ற பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும்.

வயிறுக்கோளாறு போன்றவற்றால் அவதியடைந்து வருபவர்கள் சூடான நீரில் நெய் சேர்த்து பருகலாம்.நெயின் சுவைக்கு அடிமையாகிவிட்டால் அடிக்கடி சாப்பிட தூண்டும்.

நெய் ஆரோக்கிய உணவுப் பொருள் என்றாலும் எல்லோருக்கும் அது ஏற்றதல்ல என்பது தான் நிதர்சனம்.சிலருக்கு இது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

யாரெல்லாம் நெய் சாப்பிடக் கூடாது?

அஜீரணக் கோளாறால் அவதியடைந்து வருபவர்கள் நெய்யை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.நெய் சாப்பிட்டால் உடலில் கபம் அதிகரித்துவிடும்.எனவே கபம் உள்ளவர்கள் நெய் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சளி,இருமல்,காய்ச்சல் பாதிப்பால் அவதியடையும் போது நெய் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.கர்ப்பிணி பெண்கள் வயிறு உப்பசம்,செரிமானக் கோளாறு,வயிறு கோளாறு போன்ற பாதிப்புகளால் அவதியுறும் போது நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.கல்லீரல் மற்றும் ,மண்ணீரல் தொடர்பான பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் நெய் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.நெய் ஆரோக்கியத்திற்கு நல்லது தான் என்றாலும் கொலஸ்ட்ரால் பிரச்சனை,இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் நெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இது உடல் பருமன் பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும்